Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 காளையர்கள் மல்லுக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள புனித சவேரியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆலயம் முன்பு பாஸ்கா திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளில் சில மின்னல் வேகத்தில் சென்று விடுகின்றது.

சில காளைகள் களத்தில் வீரர்களை நெருங்க விடாமல் விளையாடுகிறது. இருப்பினும் வீரர்கள் காளையுடன் மல்லுக்கட்டி அடக்கி வருகின்றனர். இதில் களத்தில் நின்று விளையாடும் போது பார்வையாளர்களின் ஆரவாரத்தால் களம் களைகட்டியுள்ளது.

மேலும் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி காணும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, மின்விசிறி, அண்டா, குடம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *