நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் நேற்று வெளியானது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தில் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். திரையரங்குகளுக்கு முன்பாக வெளிவிடும் மேளதாளங்கள் முழங்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.


இந்நிலையில் திருச்சி லால்குடி அன்பு தியேட்டரில் வெளியான வலிமை படத்தின் ரசிகர்கள் ஷோவில், திரையரங்குக்குள் வெடி வைத்ததை தடுத்த, லால்குடி காவல்நிலைய காவலர் சுரேஷ் என்பவரை, தோளில் கடித்து வைத்த, டால்மியாபுரத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அருண்குமார், கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments