திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரம்பேட்டை காவல் நிலைய குற்ற எண்.280/17, U/s 147 148, 448, 342,323 366 A 506(2) IPC r/w 4, 5(1) 2, 6 of POCSO Act & 109 IPC வழக்கில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா, நல்லூர் போதைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் மோகன்ராஜ் 23/17 என்பவர். கடந்த 2017 ஆண்டு சோமரம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்ட பூவாலூர் பகுதியில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த குற்றத்திற்காக மேற்படி எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மேற்படி சிறுமியை கடத்திய குற்றத்திற்காக எதிரி மோகன்ராஜ் மற்றும் 13 நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2. இந்நிலையில் திருச்சி மகிளா நிதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞராக திருமதி. சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் நேற்று (17.09.2025) திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முக பிரியா அவர்கள் எதிரி மோகன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 20,000-ம் அபராதம் விதித்தும், மற்ற எதிரிகள் இவ்வழக்கில் தொடர்பற்றவர்கள் என கூறி 13 நபர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.
3) இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் நீதிமன்ற பெண் காவலர் திருமதி.நித்யா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments