திருச்சியில் கொட்டும் மழையில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த மணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 63 ஊராட்சியில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி ‘மக்களுடன் எம்எல்ஏ’ சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு கடந்த 14 ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ‘மக்களுடன் எம்எல்ஏ ‘ என்ற தலைப்பில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தினந்தோறும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை கேட்டு செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் 63 நாட்களில் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 63 ஊராட்சி மக்களை சந்திக்க முடிவு செய்து ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த மக்களுடன் எம்எல்ஏ நேர்காணல் நிகழ்ச்சியின் 4ம் நாளான இன்று மூவானுர் ஊராட்சியில் நடைபெற்றது.இதில் மூவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் ,கீழூர் கிராம பகுதியில் மக்கள்ளை சந்தித்தார். அப்போது கிராம மக்கள் எம்எல்ஏ கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கிராம மக்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் :-100 நாள் வேலை திட்டத்தினை மத்திய அரசு நிறுத்திவிட்டதாகவும் நமது தமிழக முதல்வர் நிதி நெருக்கடியிலும் இதற்காக நிதி ஒதுக்கி 100 நாள் வேலையினை வழங்கிய வருகிறார் .வீட்டுமனை பட்டா ,மகளிர் உரிமைத் தொகை ,இதுகுறித்து பலர் கேட்டுள்ளனர் .
மகளிர் உரிமைத் தொகைக்காக முகாம்கள் நடைபெற உள்ளது ,முகாமில் பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை பெறலாம் ,அதேபோல வீட்டுமனை பட்டாவிற்கு உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பதிவு செய்து பட்டா பெற்றுக் கொள்ளலாம் .தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது ஒவ்வொருவராக கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதில் மகளிர் உதவி தொகை வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு, சாலை வசதி,சமுதாயக்கூடம் ,இளைஞர்கள் விளையாடுவதற்கு மைதானம் போன்ற ஒரு வசதிகளை செய்து தர கோரி கோரிக்கை முன் வைத்தனர்.கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்த கதிரவன் அனைத்து கோரிக்கைகளுக்கும் தகுந்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையின் முதல் கட்டமாக இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கழகத்தில் தங்களை மிகவும் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் கிராம மக்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
Comments