திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கரட்டுப்பட்டியில் தேமுதிக வின் 21 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 73 அடி உயர கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து 21 கிலோ கேக்கை பிரேமலதா விஜயகாந்த் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. ஜனவரி 9 ம் தேதி கடலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் எங்களின் நிலைப்பாடு என்ன? யாருடன் கூட்டணி உள்ளிட்ட அனைத்து கேள்விக்கும் பதில் அறிவிப்போம்.
பிரசாரத்தை தொடங்கி உள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், அதே போல் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாதா? அவர் ஒரு நினைப்பில் பேசுகிறார். அவரை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ, ஆலோசனை சொல்லவோ நாங்கள் இல்ல. அவர் அவருக்கான ஸ்டைலில் பேசி இருக்கிறார். இப்போது விஜய்க்கு இருக்கும் நெருக்கடியை போன்று 20 வருடத்திற்கு முன்பே சந்தித்தவர் விஜயகாந்த். புதிதாக வருபவர்களுக்கு எல்லா சவால்களும் இருக்கும். சவால்களை முறியடித்து வெற்றி காணும் போது தான் அது மக்களால் அங்கீகரிக்கப்படும். திரை துறையில் இருந்து வருபவர்கள் பிரபலமானவர்கள் அதனால் தான் நெருக்கடிகள் அதிகம். ஆனால் நாங்கள் அதையெல்லாம் பார்த்தவர்கள் இதுவெல்லாம் பெரிதல்ல என்று கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments