திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், “மக்களுடன் மண்ணச்சநல்லூர் கதிரவன்” என்ற மக்கள் சந்திப்பு பயணத்தில் ஆறாவது நாளாக நேற்று முசிறி கிழக்கு ஒன்றியம் டி புதுப்பட்டி ஊராட்சி மக்களை சந்தித்தார்.
கிராம பொதுமக்கள் மண்ணச்சநல்லூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் . .டி புதுப்பட்டி, திருவெற்றியூர், வடக்கு மற்றும் தெற்கு நல்லியம்பட்டி ஆகிய கிராம மக்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கதிரவனிடம் அப்பகுதி பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்..
கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அனைத்து கோரிக்கைகளுக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
கிராம பொது மக்களின் பிரதான கோரிக்கைகளான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதை தெரிவித்தார் .தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது.
நாளை மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருவெள்ளறை ஊராட்சி மக்களை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments