திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன், மக்களுடன் மண்ணச்சநல்லூர் எஸ். கதிரவன் என்ற மக்கள் சந்திப்பு பயணத்தில் இரண்டாவது நாளான நேற்று அய்யம்பாளையம் ஊராட்சி மக்களை எம்எல்ஏ கதிரவன் சந்தித்தார். எம்எல்ஏவை வாணவேடிக் கையுடன் வரவேற்ற பொதுமக்கள் .
அய்யம்பாளையம், சேந்தமாங்குடி, சாலப்பட்டி, கல்லாங்கொத்து, கொள்ளுகட்டிபாளையம் பெரம்பூர், சானாரபாளையம் ஆகிய கிராம மக்களை எம்எல்ஏ சந்தித்து பேசினார். மக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை எம்எல்ஏவிடம் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் கழகத்தில் தங்களை மிகவும் ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
கிராம மக்கள் சிலர் மகளிர் உதவி தொகை வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்த எம்எல்ஏ கதிரவன், அனைத்து கோரிக்கைகளுக்கும் தகுந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும் கிராம மக்கள் அனைவருக்கும் இரவு உணவு விருந்து வழங்கப் பட்டது. நாளை மண்ணச்சநல்லூர் ஒன்றியம் இருங்கலூர் ஊராட்சி மக்களை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments