திருச்சி காந்தி மார்க்கெட்க்கு வாழைப்பழம் வரத்து அதிகமாக உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தேனி மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு வகையான வாழைப் பழங்கள் விற்பனைக்காக வருகிறது. வரத்து அதிகமாக உள்ளதால் வாழைப்பழங்களின் விலை அதிரடியாக குறைந்து காணப்படுகிறது.
இதில் செவ்வாழைப்பழம் தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவு காரணமாக பொதுமக்கள் செவ்வாழைப்பழத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூபாய் 60 முதல் 80 வரை விற்பனையான செவ்வாழை தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் ஒரு கிலோ கற்பூரவள்ளி 12 ரூபாய், கூவம் 7 ரூபாய், நேந்திரம் 15 ரூபாய், ஏலரிசி 15 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களின் விலை குறைந்து காணப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments