மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் திருச்சியில்  பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் திருச்சியில்  பேட்டி

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள்.பா.ஜ.க- அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்.

திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வெற்றிக் கூட்டணியே சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், 2 லட்சத்து 88 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்கான எவ்வித நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.

பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பு அரசியலை நடத்தி, வெறுப்பின், பிரிவினையின் தூதுவர்களாக இருக்கிறார்கள்.

பா.ஜ.கவின் வெறுப்பு அரசியலால், 
நாட்டில் அண்மைக் காலமாக மதசார்பின்மை என்கிற வார்த்தை அருவருப்பான வார்த்தையாக பார்க்கப்படுகிறது.

ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே தலைவர் என்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாஜகவினர் செயல்படுகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி, மத்திய அரசு 'பிக்பாக்கெட் கவர்மெண்டாக' உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜனநாயக விரோத செயல்கள், வன்முறைகளில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. 

இரண்டு கட்சிக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடக்குமா? என்று தெரியவில்லை.

புதுச்சேரியில் பாஜக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஜனநாயக விரோத செயலைச் செய்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருபோதும் நாங்கள் பா.ஜ.க.,வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. மதச்சார்பின்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நாங்கள் மட்டுமே நாடு முழுவதும் பா.ஜ.கவின் மக்கள் விரோத கொள்கைகளை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறோம்" என்றார்.