NAAC தரச்சான்றும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவும் பெற்று, திருச்சி காஜாமலை பகுதியில் தன்னாட்சியுடன் இயங்கிவரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
கல்லூரி வளாக திறந்த வெளி அரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில், தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கல்லூரி முதல்வர், தேர்வு நெறியாளர், தேர்வு உதவி நெறியாளர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக பணியாளர்கள் பங்கேற்ற விழாவில் முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை கைகளால் 822 மாணவர்கள் பட்டம் பெறுக்கொண்டனர்.
தொடர்ந்து
மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில்…
ககயாண் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது… எப்போது செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது? என்ற கேள்விக்கு…
ஒவ்வொரு அங்கமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு பரிசோதனைகள் வெற்றியடைந்த பிறகு, இந்த வருட இறுதிக்குள் ககயாண் திட்டம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்றார்.
சந்திராயன் 4 திட்டம் 2028ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என பிரதமர் கூறினார்.. அதனால் ஏற்படும் பயன்கள் என்ன? என்ற கேள்விக்கு…
சந்திராயன் ஒன்று நிலவு சுற்றுவட்டப் பாதை நின்றது. இரண்டு மெதுவாக இறக்கும் முயற்சியில் கடைசி நேரத்தில் தோல்வியடைந்தது. சந்திராயன் மூன்று நிலவில் தரையிரக்கப்பட்டது. சந்திராயன் 4 ஆளில்லாமல் சென்று திரும்பும் வகையிலும், பின்னர் மனிதரை பத்திரமாக அழைத்துச்சென்று திரும்பும் வகையிலும் அதன் பயன்பாடு இருக்கும்.
காமராஜர், பெரியார் போன்றவர்கள் கல்வி நிறுவனங்களில் அதிகம் படிக்கவில்லை. அதை கடந்து வாழ்வில் கற்றுக் கொண்டார்கள். அதற்கு ஆர்வம் தேவை. ஆர்வம் இல்லாமல் கல்வி நிலையத்திற்கு வந்தாலும் கற்றுக் கொள்ள முடியாது. கல்லூரியிலும் அதேசமயம் கல்லூரிக்கு வெளியிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நான் வகுப்பறையை தாண்டி கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments