Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தீவிர தூய்மைப் பணி திட்டத்தை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தீவிர தூய்மைப் பணி தொடக்க நிகழ்ச்சியில், மாண்புமிகு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை 3.6.2022 சென்னையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5மண்டலங்களில் மண்டலத்தலைவர்கள், உதவிஆணையர்கள் முன்னிலையில் தீவிர தூய்மைப் பணி இன்று (11.06.2022)நடைபெற்றது.  

மாண்புமிகு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்கள், 5வது ,மண்டலம் உழவர்சந்தை பகுதியில் மண்டலத்தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோரை கொண்டு தூய்மை உறுதிமொழியினை ஏற்று, தூய்மைப் பணியினைத் இன்று (11.06.2022)தொடங்கி வைத்தார். 

இதேபோல் மாநகராட்சி ஆணையர் இரா..வைத்திநாதன், 4வது , மண்டலம் கே.கே.நகர், சுந்தர்நகர் பகுதியில் மண்டலத்தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோரை கொண்டு தூய்மை உறுதிமொழியினை ஏற்று, தூய்மைப் பணியினைத் தொடங்கி வைத்தார். இதில், 5மண்டலங்களில் 2000 நபர்கள் பங்கேற்று இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மேலும் குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் வகையிலும், “”””எனது குப்பை எனது பொறுப்பு”” என்பதை அனைவரும் பின்பற்றிடும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 

இந்தத் தூய்மைப் பணி முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய சுற்றுலாத் தலங்கள் பிரசித்தி பெற்ற கோவில்கள், சந்தைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.  

தூய்மை உறுதிமொழி 

என் நகரம் என் பெருமை என் நகரத்தைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும், பொறுப்புமாகும். பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே நகரத் தூய்மைக்கான முதற் காரணம் என்பதை நான் நம்புகிறேன். தூய்மைப் பணிகளுக்கு என்னை அர;ப்பணித்துக் கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைப்பேன். தூய்மை நகருக்கான என் முயற்சியில், நான் பங்கேற்பதுடன், என் குடும்பத்தாரையும், சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தைத் தூய்மையாக வைக்கப் பேருதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், பல்வேறு குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் சுயஉதவிக்குழுவினர், பல்வேறு அமைப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *