திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு,காளையன் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் குறித்து மூன்று நாட்களாக மேல்நிலை நீர் தேக்கதொட்டி மற்றும் அப்பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை
ஆய்வு செய்தபின் இன்று குடிநீர் திறந்து விடப்பட்டது அதனை மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் வீடு வீடாக குடிநீரை ஆய்வு செய்து அதன் குளோரின் அளவையும் பொதுமக்கள் முன்னிலையில் குடிநீரை குடித்துப் பார்த்து பொதுமக்களிடம
தூய்மையான குடிநீர் வருவதை உறுதி செய்தார். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறும் அறிவுறுத்தினார்மேலும் அப்பகுதியில் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பார்த்து ஆறுதல் தெரிவித்து பொதுமக்கள் தங்களது புகார்களை நேரடியாக எனக்கு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மண்டலத் தலைவர் திருமதி விஜயலட்சுமி கண்ணன், நகர் நல அலுவலர் திரு. விஜய சந்திரன்,செயற்பொறியாளர் திரு.கே. எஸ். பாலசுப்பிரமணியன் உதவி ஆணையர் திரு. சென்னு கிருஷ்ணன் ,உதவி செயற்பொறியாளர் திரு இப்ராகிம் ,மாமன்ற உறுப்பினர்கள் முத்துக்குமார்,திருமதி பங்கஜம் மதிவாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments