திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஜங்ஷன், இ.பி.ரோடு, சத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மேயர் அன்பழகன் இன்று (31.03.2023) நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் உணவு, வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற வசதிகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாநகராட்சியில் மூன்று இடங்களில் நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி இ.பி.ரோடு பகுதி, மதுரைரோடு சத்திரத்திரம், ஜங்சன் இயில்நிலையம் எதிரில் கடந்த உள்ளது. இந்தகட்டிடத்தில் 25 ஆண்கள், 25 பெண்கள் என 50 பேர் தங்கலாம். இவற்றில் தலையணை, படுக்கை விரிப்பு கட்டில்கள் உள்ளன.
மேலும் இந்த விடுதியில் தனித்தனி குளியலறைகள், கழிப்பறைகள், மற்றும் பொதுக் கழிப்பிட வசதி, துணி துவைக்க தனி இடம், சாப்பாட்டுக் கூடம், சமையல் கூடம், நிர்வாக அலுவலகம் ஆகியவை அமையுள்ளது. முன்று நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 100க்கும் முதியோகளை தொண்டு நிருவனத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இதனை பாவையிட்ட மேயர் மு.அன்பழகன், அவர்களுக்கு மருத்துவம் மற்றும் தெவையான உணவு, வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் மண்டலத்தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், லோகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, பிரபாகரன் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் சண்முகம், ரவி, அக்பர் அலி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments