மறுமலர்ச்சி திமுக செப்டம்பர் 15-இல் திருச்சி சிறுகனூரில், அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117-ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை மிகச்சிறப்புடன் நடத்திட ஆயத்தமாகி வருகின்றது.
அணிதிரள்வோம்!
ஆர்ப்பரிப்போம்!
அங்கீகாரம் பெறுவோம்!
என்ற மந்திரச் சொல்லுடன் தலைவர் வைகோ அவர்களுக்கு மற்றும் ஒரு வரலாறு திரும்புகிறது என்ற எதிர்பார்ப்புடன், திருச்சி எம்.பி. நமது அண்ணன் துரை வைகோ அவர்கள் பணிகளை முடுக்கிவிட்டு களப்பணியாற்றி வருகின்றார்.
முதலில் மாநாட்டு இலச்சினை (LOGO) வெளியிடப்பட்டது. நமது சமூக வலைதள பக்கங்களில் அதுவே முகப்புப் படங்களாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நமது கார்களில் ஒட்டுவதற்காக பிரத்யோக ஸ்டிக்கர் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியை வைத்து ஸ்டிக்கராக மாற்றி, நமது மாநாடு. நமது கார்களில் ஒட்டுவோம்.
தங்களது மாவட்டங்களின் பெயர் இந்த வரைகலையில் சேர்த்து பிரிண்ட் செய்ய விரும்பினால், மூலப்படம் (FILE IMAGE) வேண்டும் என்பவர்கள், திருச்சி எம்.பி. அலுவலகத்தில் உள்ள திரு.மூவேந்தன் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
நாளை முதல் நமது மாநாடு..நமது கார்களில் ஸ்டிக்கர்களாக பளிச்சிடட்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments