Site Logo mobile
Search Icon
Mobile Gif
Health

நீரிழிவு நோயின் அறிகுறிகளும் தடுக்கும் வழிமுறைகள்

நம் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. உடலுக்குத் தேவைப்படும் நீரின் அளவுக்கும் வெளியேறும் நீரின் அளவுக்கும் இடையே ஏற்படும் சமச்சீரற்ற நிலையே நீரிழிவு எனப்படுகிறது. 
வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் போது ஒருவருடைய உடலிலிருந்து நீர் அதிகமாக வெளியேறும். வயிற்றுப்போக்கு நீருடன் இருந்தால், நீரிழிவு ஏற்படலாம். மனித உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உடனடியாகத் தெரிவிக்கும் சமிக்ஞைகள்தான் நாவறட்சியும் தண்ணீர் தாகமும். வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் சேர்ந்துகொள்ளும். பெரியவர்களுக்கு இந்த உபாதை ஏற்படுகிறது என்றால், உடனே அதற்கான சிகிச்சையை அவர்களால் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், குழந்தைகளுக்குச் சொல்லத் தெரியாது என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உடலில் போதிய நீர் இல்லாத காரணத்தால் வயிற்றுப்போக்கு தீவிரமாகிக் குழந்தைகள் மரணமடைவதற்குக்கூட வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறந்த ஆறு மாதக் குழந்தையிலிருந்து எந்த வயதில் இருப்பவரையும், நீரிழிவு செயலிழக்க வைத்துவிடலாம். நீரிழிவு என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. எனவே நம் உடலில் உள்ள அனைத்து செயல்களும் செயல்பட நீர் அவசியமான ஒன்று. செல்களில் பெரும்பாலான பகுதி நீரால் ஆனது. 

ஆனால் சில சமயங்களில் சில மருத்துவ நிலைகளால் நாம் நீரிழிப்பை பெறுகிறோம். அதிகப்படியான வியர்வை, வாந்தி, வயிற்று போக்கு போன்றவை உங்களுக்கு நீரிழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. பெண்கள் ஒரு நாளைக்கு 92 அவுன்ஸ் (11.5 கப்) மற்றும் ஆண்கள் ஒரு நாளைக்கு 124 அவுன்ஸ் (15.5 கப்) நீரும் குடிக்க வலியுறுத்தப்படுகிறது. பணியின் போது, விளையாட்டு வீரர்கள், அதிக வெப்பநிலைக்கு ஆளாகும் நபர்கள் நீரிழப்பை பெறுகின்றனர்.

உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழக்கும் போது உறுப்புகள், செல்கள் மற்றும் திசுக்கள் செயல்பட முடியாமல் போகிறது. இதுவே பின்னாளில் ஆபத்தான சிக்கல்களுக்கு வழி வகுக்கும். லேசான நீரிழப்பு என்றால் அதை நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றி சரி செய்யலாம். இதுவே கடுமையான நீரிழிவு  ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. இப்படி நமக்கு ஏற்படும் நீரிழப்பை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

​நீரிழிவு நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் : 

சோர்வு, உலர்ந்த வாய், தாகம் அதிகரித்தல், சிறுநீர் கழித்தல் குறைந்து போதல், கண்ணீர் உற்பத்தி குறைதல், உலர்ந்த சருமம், மலச்சிக்கல், தலைச்சுற்றல், தலைவலி, லேசான நீரிழப்பு உண்டாதல், லேசான மற்றும் கடுமையான நீரிழப்பு அறிகுறிகள் அதிக தாகம் வியர்வை உற்பத்தி இல்லாமை, குறைந்த இரத்த அழுத்தம், விரைவான இதய துடிப்பு விரைவான சுவாசம், மயக்கம், தோல் சுருங்கிப் போதல், அடர்ந்த சிறுநீர் அவசர சிகிச்சை அறிகுறிகள் கடுமையான வயிற்று போக்கு மலத்தில் இரத்தம் இருத்தல் 3 நாட்களுக்கு மேல் வயிற்றுப் போக்கு நீர்ச்சத்து குறைந்து போதல்

​நீரிழிவு நோயை எப்படி கண்டறிவது ?

உங்கள் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய அறிகுறிகளை உங்கள் மருத்துவர் பரிசோதிப்பார். குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் விரைவான இதய துடிப்பு நீரிழப்பைக் குறிக்கும். 

தடுக்கும் வழிமுறை :

நீங்கள் ஒரு துல்லியமான அளவீட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். அதிக உப்பு அல்லது சர்க்கரையைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். ​தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சோடா, ஆல்கஹால், அதிகப்படியான இனிப்பு பானங்கள் அல்லது காஃபின் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இந்த பானங்கள் நீரிழப்பை மோசமாக்கும். சிகிச்சை அளிக்கப்படாத நீரிழப்பு உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், நல்ல காற்றோட்டமான உள்ளாடைகளை அணியுங்கள். வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள்.

நீரிழிவை கண்டுக்காமல் விடுவது சிக்கலை ஏற்படுத்தும். எனவே சரியான நேரத்தில் நீரிழப்பை கண்டறிந்து உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். உங்க உடலை எப்பொழுதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க முயற்சி செயய்யுக்கள். வாந்தியுடனோ, வாந்தி இல்லாமலோ வயிற்றுப்போக்கு உள்ள ஒருவருக்கு அதிக அளவில் திரவ உணவுகளை அல்லது நீரூட்டபானங்களை ஆரம்பத்திலேயே கொடுத்தால் நீரிழப்பைப் பெரும்பாலும் தடுத்துவிடலாம். குறிப்பாக, நீராக மலம் கழிக்கிற சிறு குழந்தைகள் விஷயத்தில் அடிக்கடி தாய்ப்பால் ஊட்டுவது நல்லது. நீரிழப்புக்குள்ளான ஒருவர் தண்ணீர், தேநீர், சூப், கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளை நிறைய குடிக்க வேண்டும். நீரூட்டபானம் சிறந்தது. நீரிழப்புக்கு ஆளானவர், வழக்கம் போலச் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்வரை இரவும் பகலும் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை அவருக்கு நீரூட்ட பானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும்.

பெரியவர்களுக்கு 3 லிட்டர் அல்லது அதற்கு அதிகமாகவும் சிறு குழந்தைகளுக்குக் குறைந்தது 1 லிட்டரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும். நோயாளி வாந்தி எடுத்து கொண்டிருந்தாலும், இந்த நீரூட்ட பானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நீரிழிவுக்கு உள்ளானவரால் தேவையான அளவு நீரூட்ட பானத்தைக் குடிக்க முடியாவிட்டால், அல்லது அவர் குடித்த அனைத்தையும் வாந்தி எடுத்தால், சிரைவழியாக நீரூட்டக் கரைசலைச் செலுத்துவதற்கு நலப்பணியாளர் ஒருவரை நாட வேண்டாம். நீரிழப்பு ஏற்பட்டு நிலைமை மோசமாகி, ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ உதவியை நாடவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *