Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருமண அழைப்பிதழில் மூலிகைகளின் மருத்துவ பயன்கள்!  புதுமையில் பழமை!

இரு மனம் இணையும் திருமணத்தில் இரு வீட்டு உறவுகளையும், நட்பையும் அங்கீகரிப்பது திருமண அழைப்பிதழே. பழைய காலங்களில் வெற்று காகிதத்தில் எழுதுவது பத்திரிக்கையாக இருந்தது. பின்பு கால போக்கில் மஞ்சள் பத்திரிகையாக அச்சடிக்கப்பட்டது. நாகரீகம் வளர வளர மஞ்சள் பத்திரிக்கை காணாமல் போய் பலவித வண்ணங்கள் மற்றும் மாறுபட்ட வடிவங்களோடும் வந்துவிட்டது.

இன்றைய இளம் தலைமுறை  தங்களுடைய திருமணத்தில் ஏதேனும்   புதுமையாக செய்ய வேண்டும் என்று அதிக ஆர்வத்தோடும் செய்து வருகின்றனர். அந்த புதுமைகள் திருமண பத்திரிகைகளில் இருந்தே தொடங்க ஆரம்பித்து விட்டன. சில திருமண பத்திரிகைகள் பார்த்த உடனே மனதில் நின்று விடும் திருமண பத்திரிகைகளின் வடிவமே நம்மை முதலில் ஈர்க்கும்.

அவ்வகையில் திருச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஷாலினி என்ற மணமக்கள் தங்களது திருமண பத்திரிக்கையில் மூலிகையும் மருத்துவ குணங்களும் என்று 100 மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகள் குறித்து அச்சடித்துள்ளனர். அதிமதுரம் – தீரும் நோய்கள்: இருமல் வயிற்றுப்புண் சுவையின்மை போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவ தாவரமாகும்.

ஆவாரை, ஊமத்தை, எருக்கன், ஒதியன், கற்பூரவள்ளி, கஸ்தூரி மஞ்சள், காசு கட்டி, கிராம்பு, கீழாநெல்லி இப்படி  நம்மை சுற்றி எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளின் மருத்துவ பயன்கள் குறித்து விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் பத்திரிக்கையானது அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமண பத்திரிக்கையில் திருமணம் குறித்த தகவலோடு இது போன்ற  சமூக அக்கறை கொண்ட செயல்களையும் புதுமையாக புகுத்துவது அனைவரும் விரும்பும் வகையில்  ‌ இருப்பதோடு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *