சூரியன் எப் எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென மெகா ஓவியப் போட்டி வருகிற (10.03.2023) நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம், பாலசமுத்திரம் பகுதியிலுள்ள சௌடாம்பிகா வித்யாலயா CBSE பள்ளியில் நடைபெற உள்ள இந்த ஓவியப்போட்டில், பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் தொடங்குகிறது.
இதுப்போன்று சூரியன் எப் எம், தொடர்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கான மெகா ஓவிய போட்டியை நடத்துகிறது. போட்டிக்கு நுழைவு கட்டணம் இல்லை. காலை 09:00 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படும். போட்டியில் எல்கேஜி குழந்தைகளுக்கு பழங்கள் என்ற தலைப்பிலும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கார்ட்டூன் தலைப்புகள், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்போம் என்ற தலைப்பிலும்,
ஏழாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கனவு இந்தியா என்ற தலைப்புகளும் ,கொடுக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9952819935, 9952023636, 9894989925 ஆகிய கைபேசி எண்ணைகளை தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments