இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், இந்திரா கணேசன் லயன்ஸ் கிளப் மற்றும் ஸ்ரீரங்கம் லயன்ஸ் கிளப் ஆகியவை இணைந்து, மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்தநாளை, Lions Clubs International அமைப்பின் நிறுவனர் தினமாக, இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடின.
நிகழ்ச்சிக்கு இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலர் எர். ஜி. ராஜசேகரன் தலைமை தாங்கினார். இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
புதிய உறுப்பினர் சேர்க்கை: டாக்டர் கே. சங்கீதா, முதல்வர் – செவிலியர் கல்லூரி, ஜெ.சி. கேபிரில்லா பிராங்கின்ஸா, உதவிப் பேராசிரியர் – துணை மருத்துவக் கல்லூரி
சமூக சேவை: 5 மரக்கன்றுகள் நடப்பட்டது, 15 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் லயன்ஸ் கிளப் சார்ந்த துணைத் தலைவர் லயன் செல்வராஜ் மற்றும் உறுப்பினர் லயன் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். பேராசிரியர்கள், மாணவ–மாணவியர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்திய இந்த நிகழ்ச்சி, மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் சேவை நோக்கத்தை நினைவுகூரும் வகையில் அமைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments