திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் பெரிய சூரியூரில் நெல் கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் தெரிவித்ததாவது,… திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. நடப்பு காரீப் பருவத்தில் 
 2020 -21 ஆம் ஆண்டில் 56 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 55 ஆயிரத்து 265 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சன்னரக நெல் ஒரு குவிண்டாலுக்கு 1958 ரூபாயும், பொது ரக நெல்லுக்கு 1918 ரூபாயும் வழங்கப்பட்டது. இதன்மூலம் 12,678 விவசாயிகளுக்கு 107 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது கோடை பருவத்தை முன்னிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொள்ள 9 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருவெறும்பூர் வட்டத்தில் குண்டூர், சூரியூர். ஸ்ரீரங்கம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, மணிகண்டம், பூங்கொடி மணப்பாறை வட்டத்தில் மரவனூர், துறையூர் வட்டத்தில் பி.மேட்டூர் ஆலத்துடையான்பட்டி, வைரி செட்டிபாளையம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           131
131                           
 
 
 
 
 
 
 
 

 04 June, 2021
 04 June, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments