திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது இந்நிலையில்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் வசிக்கும் ஜாக்குலின் மேரி அவர்களின் இல்லம் மழையால் சேதமடைந்த தகவல் அறிந்து இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகை வழங்கி அரசு அதிகாரிகளிடம் அடுத்த கட்ட நிவாரண பணிகளை உடனே செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலச்சுமி மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் சித்தாலட்சுமி வட்டக் கழக செயலாளர் முருகானந்தம், தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments