26 ஆம் ஆண்டு அன்பில் பொய்யாமொழி நினைவுளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான, அன்பில் பொய்யாமொழி நினைவு நாளையொட்டி திருச்சி மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
கல்லுக்குழி விழி இழந்தோர் பள்ளியில் கலைஞர் நகர் பகுதி கழகம் சார்பாகவும்,
மலைக்கோட்டை பகுதி கழகம் அன்னதான சமாஜத்திலும்
மாநகரக் கழகம் சார்பாக நகரப்புற வீடற்றோருக்கான தங்கும் இல்லத்திலும் காலை உணவு வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், பாபு, மாநகரக் கழகம் பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments