Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சிராப்பள்ளி காட்டூரில் AIF இன் STEM இன்னோவேஷன் அண்ட் லெர்னிங் சென்டரை (SILC) திறந்து வைத்த அமைச்சர்

தமிழ்நாடு கல்வி அமைச்சர் திருச்சிராப்பள்ளி காட்டூரில் AIF இன் STEM இன்னோவேஷன் அண்ட் லெர்னிங் சென்டரை (SILC) திறந்து வைத்தார். AIF இன் விருது பெற்ற முதன்மைக் கல்வித் திட்டமான டிஜிட்டல் ஈக்வலைசரால் வழிநடத்தப்படும் இந்த மையம், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அனுபவத்தின் மூலம் STEM ஐ ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும் DSLV மிஷன் மாணவர்களை செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் பற்றி அறிய ஊக்குவிப்பதோடு இத்தொழில்நுட்பங்களில் உயர்கல்விக்கான விருப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, 8 ஆகஸ்ட், 2023: அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை (AIF), தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இந்தியாவின் மூன் மேன் என அழைக்கப்படும் முன்னாள் இயக்குனர் இஸ்ரோ, துணைத் தலைவர் -மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், ஆகியோரின் முன்னிலையில், தமிழ்நாடு. திருச்சிராப்பள்ளி காட்டூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (ADW) STEM இன்னோவேஷன் அண்ட் லெர்னிங் சென்டரை (SILC) திறந்து வைத்தார்.

இந்த மையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் STEM தொடர்பான தேடல்களுக்கான ‘ஒன் ஸ்டாப் சொலுஷன்’ ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இன்னோவேஷன் கார்னரைக் கொண்டுள்ள இந்த மையம், அவர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் STEM இன்குபேஷன் பணிநிலையம் போன்றவற்றின் மூலம் இடைநிலைக் கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தும். மேலும் மாணவர்களின் கல்வி மேம்பட்ட STEM படிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதோடு மட்டுமன்றி அவர்களின் புதுமையான யோசனைகளை மாதிரி வடிவமாக மேம்படுத்தி மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒரு சிறந்த அடி தளத்தை உருவாகிறது.

இந்த மையம் ஆசிரியர்களுக்கான டெக்னாலஜி கார்னரையும் கொண்டிருக்கும். ஒரு ஸ்மார்ட் ஆய்வகத்துடன் பொருத்தப்பட்ட டெக் கார்னர், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தொழில்நுட்பதின் மூலம் வகுப்புகளை நடத்துவதற்கு வசதியாகவும், மேலும் AIF ஆல் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஈக்வலைசர் வழி கற்பித்தல் (DEWoT) பயிற்சியை, அனைத்து வகையான கற்பவர்களுக்குமான ஒரு தனித்துவம் பெற்ற கற்பித்தல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மற்றொரு பிரிவான ஸ்டுடியோ அமைப்பு ஆசிரியர்களுக்கு உயர்தர DE EDU ரீல்களை உருவாக்க உதவுகிறது. DE EDU ரீல்ஸ் என்பது பாடத்தின் முக்கியமான வரையறைகள், கோட்பாடுகள், அடிப்படைக் கருத்துக்கள் போன்றவற்றை 60 வினாடிகளுக்குள் மாணவர்களுக்கு புரியுமாறு எளிதாக விளக்கும் ஒரு புதுமையான முயற்சியாகும். இது நீட், என்எம்எம்எஸ் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் பயன்படுமாறு உருவாக்கப்படுகிறது.

STEM இன்னோவேஷன் அண்ட் லெர்னிங் சென்டரின் (SILC), பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் முதன்முறையாக திருச்சியில் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) உள்ளடக்கத்தை AIF அறிமுகப்படுத்துகிறது. அங்கு மாணவர்கள் டேப்லெட்டுகளைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகள் பற்றி அறிந்து கொள்வார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் AIF ஆல் வடிவமைக்கப்பட்ட STEMpowering என்ற புத்தகம் அறிமுகபடுத்தப் படுத்துகிறது, இது மாணவர்களுக்கு எளிமையாகவும் அவர்களை ஈர்க்கக்கூடியதாகவும் விளக்குவதன் மூலம் கற்றலை எளிதாக்குகிறது, கற்றலை எளிதாக்குகிறது, மேலும் மாணவர்கள் தாங்களாகவே செயல்பாடுகளை செய்வதன் மூலம் கருத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும். இந்த புத்தகம் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் NMMSஇன் முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு கேள்விகளைக் கொண்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் மாணவர்களின் கண்ணோட்டத்தை மாற்றும் கற்றல் துணையாக இருக்கும்

மேலும் AlF 98 பள்ளிகளுக்கு 146 AV Room Setup மற்றும் 113 பள்ளிகளுக்கு அறிவியல் மற்றும் கணித, கற்றல் கற்பித்தல் கருவிகள் வழங்கிறது. இதனை திறப்பு விழாவில் போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்,கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கினார். விழாவில் கலந்துகொண்டு பேசிய AIF இன் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜி மற்றும் தெற்கு பிராந்திய மேலாளர், திரு. தி. பாஸ்கரன், இந்த STEM இன்னோவேஷன் அண்ட் லெர்னிங் சென்டர், இப்பள்ளி மட்டுமின்றி அதை சுற்றி உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் STEM ஐ அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கும், 

அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் டிஜிட்டல் ஈக்வலைசர் வழி கற்பித்தல் பயிற்சி பெறுவதற்கும், DE EDU ரீல்களை உருவாக்குவதற்கும் ஒரு ஒன் ஸ்டாப் மையமாக செயல்படும்’ என்றும் கூறினார்.

விழாவை தொடக்கி வைத்துப் பேசிய தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,” என்றார்.

பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களால் வழிகாட்டப்படும் இந்த மையம், டிஜிட்டல் ஈக்வலைசரின் TLM மூலம் மாணவர்கள் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பற்றி அறிய ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையம் 250 பள்ளிகளில் 4,000 ஆசிரியர்கள் மற்றும் 60,000 மாணவர்களை கேஸ்கேடிங் பயிற்சி மாதிரியின் மூலம் கற்றுகொள்ள உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டனர். அங்கு அவர்கள் Drone மற்றும் PICO செயற்கைக்கோள்கள் மற்றும் கிளைடர்கள், ஹைட்ரோ பிளாஸ்ட்கள் மற்றும் மினி ராக்கெட்டுகளை தயாரிப்பதில் பயிற்சி பெற்றனர். இந்த மாணவர்கள் SILC திறப்பு விழாவில் தங்கள் மாதிரிகளை விளக்கி, சிறப்பு விருந்தினர் முன்னிலையில் செயல் விளக்கமளிக்கும் வாய்ப்பு கிடைத்தது,

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், முதன்மைக் கல்வி அதிகாரி சிவக்குமார், மற்றும் இன்னோவேஷன் அண்ட் டெக்னாலஜின் தலைவர் மற்றும் தெற்கு பிராந்திய மேலாளர், திரு. தி. பாஸ்கரன், போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திறப்பு விழாவும் அதைத் தொடர்ந்து வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

முடிவு அமெரிக்கன் இந்தியா ஃபவுண்டேஷன் பற்றி:

அமெரிக்கன் இந்தியா ஃபவுண்டேஷன் (AIF) இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவித்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு நீடித்த பாலத்தை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, இந்தியாவின் பின்தங்கியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. வறுமை பல பரிமாணங்களைக் கொண்டதாக இருப்பதால், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களில் உயர் தாக்கத் தலையீடுகளின் மூலம் இதை செய்துவருகிறது. சமூகங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான பரந்த ஈடுபாட்டின் மூலம் AIF அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு நீடித்த பாலத்தை உருவாக்குகிறது. AIF புதுமையான தீர்வுகளை உருவாக்க மற்றும் சோதிக்க அரசு சாரா நிறுவனங்களுடனும் நிலையான தாக்கத்தை உருவாக்க மற்றும் அளவிட அரசாங்கங்களுடனும் இணைந்து உள்ளூர் சமூகங்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது. 2001 இல் நிறுவப்பட்ட AIF, இதுவரை 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 12.9 மில்லியன் இந்திய ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது . AIF பற்றி மேலும் அறிய www.aif.org

டிஜிட்டல் ஈக்வலைசர் பற்றி:

Digital Equalizer (DE) என்பது குறைவான சேவை பெறும் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளும், குறிப்பாகப் பெண் குழந்தைகள், தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கைக்குத் தயாராக இருக்கும் உலகத்தை உருவாக்க முயல்கிறது. இத்திட்டம் செயல்திறன் மற்றும் வளம் குறைந்த பொதுப் பள்ளிகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்குதல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைத்தல், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலமும், STEM முறைகளிலும் கற்பிக்க பயிற்சி அளித்தல் மற்றும் வகுப்பறைகளை கூட்டு மற்றும் ஊடாடும் இடங்களாக மாற்றுதலின் வாயிலாக இந்தியாவின் டிஜிட்டல் பிளவைக் குறைத்து மாணவர்களை 21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தில் வெற்றிபெற தயார்படுத்துகிறது. 2004இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த திட்டம் 5.4 மில்லியன் குழந்தைகளுக்கு ஊடாடும் STEM அனுபவங்களையும், 182,025 ஆசிரியர்களுக்கு STEM கற்பித்தல் பயிற்சியையும் அளித்து நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 24, 471 பள்ளிகளை மாற்றியுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *