தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் மாபெரும் நூலகம் அமைத்திட முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
அவர்கள் அடிக்கல் நாட்டினார். திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைய உள்ளது. 1, 97,337 சதுர அடி பரப்பளவில் ஏழு தளங்களுடன் நூலக கட்டடம் கட்டப்பட உள்ளது.என இந்த நூலகம் பல்வேறு சிறப்பு
வசதிகளுடன் அமைய உள்ளது.அதன் தொடர்ச்சியாக முழுவீச்சில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments