பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்று (31.08.2025) திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு ஊரக/நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மண்டல தலைவர் மு.மதிவாணன், மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) அருணகிரி, துணை இயக்குனர் ஐ.மகாராணி, அரசு அலுவலர்கள், தனியார்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments