திருச்சியை பூர்வீகமாக கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
திருவானைக்காவல் பேட்டரி காரில் சென்று தரிசனம் செய்ய அர்ச்சகர்கள் மற்றும்
கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தும் அதனை மறுத்து நடந்தே சென்று தரிசனம் மேற்கொண்டார். கோவில் யானை அகிலாவுக்கு பழங்கள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று பின்னர் கோவிலின் சிற்பங்களையும் அதன் வரலாறு பற்றியும் கேட்டறிந்தபடி சென்று தரிசனம் செய்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments