திருச்சிராப்பள்ளி மாவட்டம், எஸ்.கண்ணனூர் பேரூராட்சி வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.27 கோடி மதிப்பீட்டில் வணிக வளாக கடைகள் கட்டும் பணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (15.03.2026) அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
ச.கண்ணனூர் சிறப்புநிலை பேரூராட்சினாது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலை தன்னகத்தே கொண்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பௌர்ணமி, இந்துக்களின் பண்டிகை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
ச.கண்ணனூர் பேரூராட்சி 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 13073 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 4200 வீடுகள் உள்ளது. ச.கண்ணனூர் கிழக்கு, ச.கண்ணனூர் மேற்கு என இரண்டு வருவாய் கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தைக்கென புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இச்சந்தைக்கு சுற்றுபுற கிராமங்களிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர்.
வாரச்சந்தையினை ஏலம் விடுதல் வாயிலாக ஆண்டுக்கு சுமார் ரூ.1.76 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலுக்கு மிக அருகாமையில் வாரச்சந்தை அமைந்துள்ளதால், வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், வாரச்சந்தையில் அதிகப்படியாக உள்ள காலியிடத்தினை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் நோக்கிலும் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வணிகவளாக கடைகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (15.03.2026) இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்த வணிக வளாக கட்டிடமானது தரைதளத்தில் 18 கடைகளுடனும் மற்றும் முதல் தளத்தில் 18 கடைகளுடனும் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கோ.துவாரகநாத்சிங், உதவி செயற்பொறியாளர் ராதா, எஸ்.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் ப.சரவணன், செயல் அலுவலர் ஜெ.கணேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments