திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் கிராம ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1.65 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று (16.12.2022) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments