Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கள்ளிக்குடி மார்க்கெட்டை காட்டுக்குள் வைத்தால் யார் வருவார்கள் _ அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் , பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…. சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கருத்துக்கு… இந்தியாவில் 14 மாநிலங்களில் முறைப்படி வரியை ஏற்றிய பின்னர் தான் நாம் வரியை உயர்த்தி உள்ளோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் தினமும் காலை அவர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து நிற்கிறார்கள். ஆகவே அப்பணிகளை செய்வதற்கும் நிதி ஒதுக்கப் பட வேண்டியுள்ளது.

இந்தியாவிலேயே வரி உயர்வில் குறைவாக உள்ள மாநிலம் எதிர்கட்சிகள் திமுக அரசை குறை கூற முடியாததால் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதிக வரிகளை ஏற்றியது அதிமுக. அவர்களுக்கு வந்தால் தக்காளி தங்களுக்கு வந்தால் ரத்தமா என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது… காட்டுக்குள் வைத்தால் யார் வருவார்கள் ? மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் மார்கெட் இருந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

வரி உயர்வு எடப்பாடி குற்றச்சாட்டு குறித்து…. 1987ல் 100 … 200 … 300, 1993ல் 100 … 150 …250 என்கிற அளவில் அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தினார்கள் – ஆனால் நாம் தற்போது அப்படி எல்லாம் உயர்த்தவில்லை. மற்ற மாநிலம் நமக்கு முன்னர் வரியை ஏற்றி விட்டனர் – நாம் அதற்கு பின்னர் தான் ஏற்றினோம். னவே வேண்டும் என்றே குறை கூறும் அவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும். மார்ச் 31 என்பதற்கு பதிலாக பிப்ரவரி 31 என்று தெரியாமல் கூறி விட்டேன் அதை இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள். எடப்பாடி கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்…. வைகையை தர்மாகோலில் மூடிய செல்லூர் ராஜு போன்றவர்கள் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள். நான் கிராமத்துக்காரன் தவறுதலாக வந்துவிட்டது என்றார்.

மணப்பாறை சிப்காட்டிற்கு ஒரு கூட்டு குடிநீர் செயல்படுத்த முதல்வர் ஒதுக்கி உள்ளார். பெரு நகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சியை எப்படி முதல்வர் விட்டார் என்று தெரியவில்லை – எப்படியும் கேட்டு வாங்கி விடுவேன் என தெரிவித்தார். முதல்வரிடம் இது குறித்து கலந்து பேசி கண்டிப்பாக திருச்சிக்கு கேட்டு வாங்கி விடுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இடத்தினையும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களின் வரைபடத்தினையும் நேரில் பார்வையிட்டு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார் ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார்,இனிகோ இருதயராஜ்,துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *