Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தி.மு.க கூட்டணியில் போட்டியிடுபவர்க்கு போட்டி வேட்பாளர் யாருக்கும் எந்த பதவியும் எப்போதும் கிடைக்காது- அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை.  

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருடனான ஆலோசனைக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அப்போது வேட்பாளர்களை ஆதரித்து நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது பேசிய அவர்.

இந்த தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் களம் காண்பதாக சொன்னார்கள். அது நம்மை நாமே அழிக்கும் செயல். ஆகவே அப்படி போட்டி வேட்பாளர்கள் இருந்தால் இப்போதே விலகி கொள்வது நல்லது. அல்லது தேர்தலில் போட்டியிட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எதிர்காலத்தில் கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் உள்ளது.

அதில் எந்தவித பதவிகளும் வழங்கப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி,தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெறுகின்றது. நிர்வாகத்தின் அமைச்சராக கே.என்.நேரு உள்ளார்.

நமது மாவட்டத்தின் அமைச்சர். ஆட்சி காலத்தில் இல்லாதபோதே 100 சதவிகித வெற்றியை பெற்றோம். அதே போல் இப்போது ஆளும் கட்சியாக உள்ளோம். இந்த தேர்தலிலும் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம். அதற்காக அனைவரும் உழைத்திட வேண்டும் என்று கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *