Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ரூ.14.41 கோடி மதிப்பிலான 22 புதிய திட்டங்கள்: அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 53 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 45.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் நுழைவு வாயிலையும், வார்டு எண் 52 பகுதிக்குட்டபட்ட கொட்ட கொல்லைத் தெரு பகுதியில் 15 வது நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும், வார்டு எண் 52 பகுதிக்குட்பட்ட பீமநகர் பகுதியில் 15 வது நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுள்ளள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தையும், வார்டு எண் 53 பகுதிக்குட்பட்ட அலெக்ஸ்சாண்டிரியா சாலையில் கே.எம்.சி மருத்துவமனை அருகில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும், வார்டு எண் 54 பகுதிக்குட்பட்ட வேடுவர் தெரு பகுதியில் கல்வி நிதியின் கீழ் ரூபாய் 29.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டிடத்தையும் திறந்து வைத்து குழந்தைகளுடன் அளவலாவி அவர்கள் வழங்கிய பூங்கொத்தினை பெற்றுக் கொண்டு இனிப்புகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 56 பகுதிக்குட்பட்ட சொசைட்டி காலனி பகுதி, எஸ்.எஸ். நகர் அருகில் மாநில நிதிக்குழு மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், வார்டு எண் 57 பகுதிக்குட்பட்ட அந்தோணியார் கோவில் தெருவில் தூய்மை பாரத இயக்கம் 2.0 சார்பில் ரூபாய் 15.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கழிப்பிட கட்டிடத்தையும், வார்டு எண் 57 பகுதிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகரில் ரூபாய் 31.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிட கட்டிடத்தையும், வார்டு எண் 57 பகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் 15 வது நிதித் திட்டம் (சுகாதாரம்) கீழ் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும், வார்டு எண் 62 பகுதிக்குட்பட்ட கீழப் பஞ்சப்பூர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 34.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பொதுக்கழிப்பிட கட்டிடத்தையும், வார்டு எண் 60 பகுதிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் 15 வது நிதித் திட்டம் (சுகாதாரம்) கீழ் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடத்தையும், வார்டு எண் 26 பகுதிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.71 கோடி மதிப்பீட்டில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்

தொட்டியையும், வார்டு எண் 25 பகுதிக்குட்பட்ட சண்முகா நகர் பகுதியில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.39 கோடி மதிப்பீட்டில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், வார்டு எண் 27 பகுதிக்குட்டபட்ட பாபுச் செட்டி தெருவில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், வார்டு எண் 27 பகுதிக்குட்பட்ட சங்கீதப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்தையும், வார்டு எண் 27 பகுதிக்குட்பட்ட பென்சனர் தெருவில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூபாய் 1.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோஷா மாநகராட்சி துவக்கப்பள்ளி கட்டிடத்தையும், வார்டு எண் 29

பகுதிக்குட்பட்ட ஆழ்வார் தோப்புப் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும், வார்டு எண் 24 பகுதிக்குட்பட்ட புத்தூர் ஹைரோடு பகுதியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும், வார்டு எண் 23 பகுதிக்குட்பட்ட புத்தூர் ஹைரோடு தெற்கு எடத்தெரு சந்திப்பு பகுதியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும், வார்டு எண் 9 பகுதிக்குட்டபட்ட உறையூர் மருத்துவமனை சாலையில் மூலதன மான்ய நிதியின் கீழ் ரூபாய் 4.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தினசரி சந்தையையும், வார்டு எண் 8 பகுதிக்குட்டபட்ட சுப்ரமணிய நகரில் பொதுநிதியின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அலுவலக கட்டிடத்தையும், வார்டு எண் 8 பகுதிக்குட்பட்ட உறையூர் பாண்டமங்கலத்தில் 15 வது நிதித் திட்டம் (சுகாதாரம்) கீழ் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூபாய் 14.41 கோடி மதிப்பீட்டில்

கட்டப்பட்டுள்ள 22 புதிய கட்டிடங்களை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப.,அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன் இ.ஆ.ப., அவர்கள், நகர பொறியாளர் திரு.சிவபாதம், மாநகர நல அலுவலர் திரு.சுபாஷ் காந்தி, மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *