பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன பொது கழிப்பிடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த அமைச்சர்
திருவெறும்பூர் தொகுதி மண்டலம் மூன்றில் 16 வது வார்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சந்தப்பேட்டை மழையின் மீது மாநகராட்சி பொது நிதியிலிருந்து 12.20 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடத்தை மாமன்ற உறுப்பினர்
மு. மதிவாணன் ஏற்பாட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் உதவி ஆணையர் சரவணன் உதவி பொறியாளர் ஜெகஜீவராமன் இணைப் பொறியாளர்கள் ஜோசப் நரசிங்கமூர்த்திதலைவிரிச்சான் பகுதி கழகச் செயலாளர் ஜெயக்குமார் வட்டக் கழக செயலாளர் தங்கவேலு கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments