சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரரின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரன் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்டம் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டிவீரரின் 250 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் வண்ணை அரங்கநாதன் மதிவாணன் கே.எஸ்.எம்.கருணாநிதி செந்தில், மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments