காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு
(21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை ஒவ்வொரு கட்டமாக தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.
திருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் மற்றும் கட்டிட பொறியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள் வல்லுனர்கள் உடன். இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision



            
            
            
            
            
            
            
            
            
            
Comments