அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரச்சாரம்  

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரச்சாரம்  

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,  அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மார்க்கெட், பாலக்கரை பகுதியில் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார். 

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்ட பிறகு பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமிய பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் மார்க்கெட் பகுதி வளையல் காரத் தெருவில் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மற்றும் மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் அ.ம.மு.க.வினர் வி.எல்.சீனிவாசன், ஆடிட்டர் ரவி, அரப் ஷா ஜான் உள்பட நூற்றுக்கணக்கானோர் அதிமுக.வில் இணைந்தனர்.

அப்போது வேட்பாளரும், அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் பேசிய போது,..

திமுக வில் நிறுத்த ஆளே இல்லாததால் சென்னையில் இருந்து வேட்பாளரை இங்கு நிறுத்துகிறார்கள். 

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தவர்கள் உயிரே போனாலும் மற்ற சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள். 

இந்த கிழக்கு தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்துள்ளேன். 

எதிரிகளே இல்லை என்று இருந்து விடாதீர்கள். 

கடுமையாக உழைத்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதில் பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், இலியாஸ்,  ஜவகர்லால் நேரு, வக்கீல் சுரேஷ், , பாலக்கரை சதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU