முதல்வர் உத்தரவு குறித்து, தான் கூறிய கருத்துகள் சில ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கத்துடன் பேட்டி

முதல்வர் உத்தரவு குறித்து, தான் கூறிய கருத்துகள் சில ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது -   அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கத்துடன் பேட்டி

முதல்வர் உத்தரவு குறித்து, தான் கூறிய கருத்துகள் சில ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது -
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கத்துடன் பேட்டி

திருச்சி இ.பி சாலையில் முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகள் மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையின் கட்டுப்பாட்டின் அடிப்படையில் பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்..

எனினும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு
வரும் திங்கள், செவ்வாய் , புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த பேச்சு - அரசியல் ரீதியாக அமைச்சர்களை தங்கியிருக்க சொன்னதாக சில ஊடகங்களில் வெளியாகி
சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து
தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த
அவர்… இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்தார்.

அதில், முதல்வர் சென்னை இருக்க சொல்லி எந்த உத்தரவும் சொல்லவில்லை . தான் கூறிய கருத்துக்கள் ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலத்தில்
திங்கள் ,செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அமைச்சர்கள் சென்னையில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு இருந்தார், அதைதான் நான் குறிப்பிட்டேன்.

Advertisement

ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை ஒட்டி இந்த மூன்று தினங்களும் அமைச்சர் பெருமக்கள் சென்னையில் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதாக தவறாக செய்தி வெளியாகியுள்ளது. நான் அவ்வாறு குறிப்பிடவில்லை
என்றார்.

மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த அமைச்சர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.