திருச்சி திமுக தெற்கு மாவட்டம், “மாவட்ட பிரதிநிதிகள்” சார்பாக கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா திருச்சி மேலச்சிந்தாமணி சிதம்பரம் மஹாலில் நடைபெற்றது.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments