திருவெறும்பூர் அருகே மாயமான பட்டதாரி பெண் காதலனுடன் கேரளாவில் இருந்தவரை துவாக்குடி போலீசார் மீட்டு வந்தனர்.திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் பத்மா (45) மகள் ஸ்வேதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டதாரி பெண் ஆவார்.
இந்நிலையில் ஸ்வேதா கடந்த 29ஆம் தேதி பெல் பகுதியில் உள்ள தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.இது சம்பந்தமாக பத்மா ஸ்வேதா தோழியின் வீட்டில் விசாரித்த பொழுது அவர் அங்கு வரவே இல்லை என சுவேதாவின் தோழியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மா இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவின் மகளை தேடி வந்தனர்.இந்த நிலையில் அந்த இளம் பெண் கேரளாவில் காதலனுடன் இருப்பது துவாக்குடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற துவாக்குடி போலீசார் அந்த பெண்ணையும் அவனது காதலையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த ஸ்வேதா தனது தாயுடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து பத்மாவோடுஸ் வேதாவை அனுப்பி வைத்தனர் அந்த வாலிபருக்கு போலீசார் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments