திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டி கிழங்கு கருங்காடு தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் தெரு முழுக்க வேப்பிலைத் தோரணம் கட்டி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தெருவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று. உறுதியானது ஒருவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மற்றொருவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கிருமி நாசினியாக வீட்டு முன்பு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரை தெளித்து வருகிறார்கள் அத்துடன் வீட்டின் முன்னும் வீதி வீதியாக வேப்பிலை தோரணங்களை கட்டி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve







Comments