திருச்சியில் பல்வேறு இடங்களில் மிதமான சாரல் மழை- மக்கள் மகிழ்ச்சிதமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 3, 4, 5 ஆகிய மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை முதலே கரு மேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக திருச்சி மாநகரத்தில் கே.கே நகர், எல்ஐசி காலனி, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம்,
மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் திருச்சி மாநகரத்தில் சுட்டரித்த கோடை வெப்பத்திலிருந்து தற்போது குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments