Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நவீன தொழில் நுட்பம் விவசாயத்தை அழிக்கும் வகையில் இருக்கக் கூடாது – திருச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பேச்சு

திருச்சி மாவட்டம் முசிறியில் அமைந்துள்ள எம் ஐ டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவோம் எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமியுடன் சேர்ந்து புது பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேவராட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர் என். ரவி, மனைவியுடன் கண்டு களித்தார். பின்னர் கல்லூரி வளாகத்தில் உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள் , ஆகியவற்றை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் வேளாண் கல்லூரி மாணவ – மாணவிகள் பராமரிக்கும் தோட்டத்தினை பார்வையிட்டு பாராட்டினார். அங்கு வைக்கப்பட்டிருந்த முருகப்பெருமான் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு ஆளுநர் மனைவியுடன் சாமி கும்பிட்டு வழிபட்டார்.

அப்போது கரும்பு, பொங்கல் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள உள் அரங்கத்தில் இயற்கை வேளாண்மை செய்து வரும் உழவர் மற்றும் தொழில் முனைவோர்கள் 45 பேருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். விழாவில் ஆளுநர் ஆர். என்.ரவி பேசும் போது தமிழில் அனைவருக்கும் வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்தார். நானும் எனது துணைவியாரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறோம். இயற்கை விவசாய பொங்கலில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவசாயிகள் உலக மக்கள் அனைவருக்கும் உணவு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உணவு கொடுத்தபதற்காக பிறந்தவர்கள். உணவு அளிக்க கூடிய நீங்கள் உயர்குலத்தை சார்ந்தவர்கள் என கூறுகிறேன். நாலடியாரில் அதற்கான குறிப்பு உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்க்கு வருவதற்கு முன் 1 ஹெக்டேருக்கு 6 டன் உணவு விவசாயம் செய்தார்கள். அதன் பின் ஆங்கிலேயர்கள் உரம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள். இதனால் மண் மலட்டு தன்மையாக மாறியது. இதை டாக்டர்.நம்மாழ்வார் சொல்லிதான் மண் மலட்டுத்தன்மை என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது.

முதன் முதலில் உரம் வைத்த போது பயிர் நன்றாக வளர்ந்து உற்பத்தி பெருகியது. பின்னர் மண்ணின் தன்மை மலடாக மாறியதால் விவசாயம் குறைந்து . இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நம்மாழ்வார் கூறியது போன்று வருகின்ற காலம் இயற்கை விவசாயதிற்க்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். வேளாண்மை முன்னோடியாக இருந்த பஞ்சாப் மாநிலம் இன்று நாட்டினுடைய விவசாய வருமானம் குறைந்த அளவு உள்ளது. இன்று வெளிமாநிலத்தில் அரிசி வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளபட்டது.

செயற்கை உரம், செயற்கை பூச்சி கொல்லி மூலம் விவசாயம் செய்தால் தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது பாரத பிரதமர் நம்மாழ்வார் போன்று இயற்கை விவசாயம் செய்து 2030 ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். நாம் பாரத பிரதமருக்கும், விவாசயத்திற்க்கும் உறுதுணையாக இருப்போம். ஆரம்பத்தில் காலம், காலமாக வேளாண்மை கலாச்சாரமாக வந்து கொண்டு இருக்கிறது.

பின்னர் செயற்கை உரம், பூச்சி கொல்லிக்கு சென்று விட்டோம் மீண்டும் நாம் இயற்கை விவசாயத்திற்க்கு மாற வேண்டும். இன்றைய அரசும், நாமும் சேர்ந்து செயல்பட வேண்டும். இயற்கை விவசாயம் தொழில் நுட்பத்தை உட்படுத்தி ட்ரோன் மூலம் பயன்படுத்தி உரம் போன்றவற்றை தெளித்து விவசாயம் செய்து வருகிறோம். அதில் இயற்கை உரங்களை பயன்படுத்தி செய்ய வேண்டும். முதன் முதலாக டிராக்டர் அறிமுகப்படுத்தபட்டபோது ராஜாஜி இது சாணி போடுமா என்று கேட்டார்.

அதற்கான காரணம் மாடு நாம் போடும் உணவை தின்றுவிட்டு அது போடும் சாணி எருவாக நமக்கு பயன்பட்டது. நவீன தொழில் நுட்பம் விவசாயத்தை அழிக்கும் வகையில் இருக்கக் கூடாது. பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்து நாம் விவசாய முறைகளை மேற்கொண்டதால் காரணமாகத்தான் விவசாயம் நலிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கலாச்சார தொன்மையை நாம் பின்பற்ற வேண்டும் அதன் வழியே விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

அதைத்தொடர்ந்து இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியினை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் விவசாயிகள் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *