பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நினைவூட்டும் வகையில், திருச்சியில் பொது மக்களுக்கு சுவையான வடைகளை வழங்கி திமுகவினர் நூதன பிரச்சாரம் செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமாக, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வடைகளை இலவசமாக வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமையில், குண்டூர் பகுதியில் மோடி சுட்ட வடைகள்’ என சில திட்டங்களைத் துண்டு சீட்டில் பட்டியலிட்டு, அந்த துண்டி சீட்டிலேயே வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கி நூதன பிரசாரம் மேற்கொண்டனர். அதில் கருப்பு பணம் மீட்பு, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்துதல், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுதல்,

எல்லோருக்கும் சொந்த வீடு தருதல், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைதல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை, மோடி சுட்ட வடைகள் என குறிப்பிட்டுள்ளனர். திமுகவினர் வழங்கிய வடைகளை பொதுமக்கள் வாங்கி சுவைத்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments