Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பஞ்சப்பூரில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: கூட்டத்திடலை நயினார் நாகேந்திரன் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 11ம்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திடலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் தேசிய திறனாய்வு கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் உரையாற்றுகின்றனர், 5:00 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்திறங்கி 6:30 மணி வரையிலும் பொதுகூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார், தமிழகத்திற்கு மத்திய அரசு நலத்திட்டங்கள் வழங்குவதில்லை என முதல்வர் கூறுகிறார்

ஆனால், கடந்த மதுரை கூட்டத்தில் 4400 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தூத்துக்குடியில் 1700 கோடி மதிப்பிலான மத்திய அரசு திட்டங்கள் நடைபெற்றது, 2025ம் ஆண்டு தூத்துக்குடியில் 4700 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமராக அறிவித்து தொடங்கி வைத்தார்,

அதேபோன்று பஞ்சப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை பிரதமர் வழங்குகிறார், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, தமிழக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது, வெகுவிரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.

தொகுதி பங்கீடு குறித்து எதுவும் சொல்ல முடியாது, காங்கிரஸ் – திமுகபோன்று இழுபறியாக இல்லை நாங்கள் உறுதியாகஇருப்பதால் தொகுதிபங்கீடு குறித்து எப்போதுவேண்டுமானாலும் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஆட்சியில் கஞ்சா, போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது, கஞ்சா போட்டுவிட்டு சாலையில் செல்பவர்களை எல்லாம் வெட்டுகிறார்கள், சிவகங்கையில் நடந்ததும் அதுதான் வீட்டில் வயதானவர்களை கூட விட்டு வைப்பதில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பொறுப்பாக ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்ய முடியவில்லை பின்பு எவ்வாறு ஆட்சி சரியாகஇருக்கும், இதனை எல்லாம் கட்டுப்படுத்தாத இந்த அரசை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *