Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி இரண்டாம் நிலை காவலர் தகுதி தேர்வில் அதிகளவில் பொறியாளர்கள் பங்கேற்பு 

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு, மற்றும் சிறை காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்திறன் தேர்வுகள்  6.2.2023  இன்று காலை 05.30 மணிக்கு,  துவங்குகியது. இதில் 1052 தேர்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 தேர்வாளர்கள் காலை 05.30 மணிக்கு ஆஐரில் இருக்கவேண்டும். உடல்திறன் தேர்வில் கலந்துகொள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவு சீட்டு (Call Letter) கட்டாயம் எடுத்து வரவேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் முழுவிபரங்களுடன் உடல்திறன் தேர்வில் பங்குகொள்ள ஏதாவது ஒரு அடையாள சான்று எடுத்துவரவேண்டும்.

டி-சர்ட் மற்றும் லோயர் அணிந்துவருபவர்கள், எவ்வித சாதி, மத, இன உணர்வுகளை வெளிபடுத்தும் விதமாக அணிந்து வரக்கூடாது. வேறு எந்தவிதமான குறியீடுகள், விதவிதமான வண்ணங்கள் போட்ட உடைகள் அணிந்து வரக்கூடாது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் தங்களுக்குரிய ஒதுக்கீட்டு அசல் ஆவணங்களை கட்டாயம் எடுத்து வரவேண்டும். உடல்திறன் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டு கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நடைபெறும் இடத்தில் தனியார்உணவக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவை உள்ளவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். 

உரிய நேரத்தில் தேர்விற்கு வரவேண்டும். தேவையற்ற பொருட்களை எடுத்து வரக்கூடாது.
 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வானது, திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்,  மேற்பார்வையிலும், திருச்சிராப்பள்ளி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்  தலைமையிலும். 5 தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு, மற்றும் சிறை காவலர்களுக்கான உடல் திறனறி தேர்வு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்திற்க்கு 5நாட்களுக்கு விளையாட்டு வீரர்கள் பொதுமக்களுக்கு அண்ணா விளையாட்ரங்கில் அனுமதி கிடையாது.

இன்று மட்டும் 400  பேருக்கு உடல் தகுதி தேர்வு, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், சான்றிதழ் சரி பார்க்கும் பணி உயரம்,மார்பளவு  சோதனை நடைபெறுகிறது. 400 பேரில் 80 சதவீதம் பொறியாளர்கள் படித்து முடித்தவர்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளனர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 # திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *