திருச்சியில் நலிவடைந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இலவச மளிகை பொருள்கள்!!
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் நேற்று காலை 10.30 மணியளவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக , நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்ற செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி படிக்கும் ஒரு சிலர் மாணவ, மாணவிகளின் குடும்பத்தினர்களுக்கும், நலியுடைந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான மஞ்சள் தூள், சீரகம், சோம்பு, கடுகு, மிளகு, வெந்தயம் , துணி மற்றும் குளியல் சோப், பல்பொடி, ரவை, சேமியா, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், புளி, பொட்டுக்கடலை, பெருங்காயத்தூள், பிஸ்கட் போன்ற மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ , மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வாசுதேவன், வெ.இரா.சந்திரசேகர், குண்டூர் லலிதா, கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், ஜெயபாலன், செந் தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ரீனா ஜான், ஜெயந்தி, விக்டோரியா, மரினா, சந்திராதேவி, பேராசிரியர் கி.சதிஷ்குமார், ரயில்வே சி.பெரியசாமி , என்.வெங்கடேஷ் மற்றும் பலர் உதவியுடன் ஐம்பத்திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு தனிதனியாக சென்று பொருள்கள் வழங்கப்பட்டது.