திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் வேண்டியும் விடுதி மாணவர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்த கோரியும் தண்ணீர் மற்றும் கழிவறைகளை சரிசெய்ய வலியுறுத்தியும் சென்ற ஆண்டு கல்லூரி இரு பகுதியாக பிரித்து கல்லூரி நடைபெற்றது தற்போது
திடீரென்று ஒரு பகுதி கல்லூரி என்று கல்லூரி நிர்வாகம் கூறியதன் அடிப்படையில் மாணவர்கள் தினந்தோறும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்கின்ற பொழுது பேருந்து பற்றாக்குறை ஏற்படுகிறது இரண்டு பகுதியாக இருந்த பொழுது பேருந்து
பற்றாக்குறையாக இருந்த நிலையில் தற்பொழுது ஒரு பகுதியாக மாற்றியதன் அடிப்படையில் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் மேலும் குடிப்பதற்கு தண்ணீர் கூட தட்டுப்பாடு இருக்கிறது எனவே உடனடியாக மாணவகளின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி விடுதியில் குடிதண்ணீர் மற்றும் இரண்டு பகுதியாக கல்லூரி நேரத்தை மாற்றுதல் மற்றும் பேருந்து உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தருமாறு இந்திய மாணவர் சங்கத்தின் கிளை தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வரின் அறையை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments