திருச்சி திருவானைக்கோவில் பாரதி நகரில் ஜெகன் – சுகந்தி (26) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில், 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் குடுகுடுப்பைக்காரன் சுகந்தி வீட்டின் முன்பு வந்து தாலி தோஷம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சுகந்தி குடுகுடுப்புகாரனிடம் என்னவென்று கேட்டபோது தாலிதோஷம் இருப்பதால் உங்கள் கணவர் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளான். இதற்கு பரிகாரம் செய்ய தாலியை கழற்றி தரும்படி குடுகுடுப்புகாரன் கேட்டுள்ளான். கணவர் உயிருக்கு ஆபத்து என்று கூறியதால் பயந்து போன சுகந்தி தனது தாலி சரடு காசு என ஒன்றரை பவுன் மதிப்புள்ள நகையை குடுகுடுப்பு காரரிடம் கொடுத்துள்ளார்.


பின்னர் பரிகாரம் செய்வதாக கூறி சுகந்தியை ஏமாற்றிவிட்டு நகைகளை குடுகுடுப்பைக்காரன் எடுத்து சென்றுள்ளான். ஏமாந்து போன அந்தப் பெண் தன் கணவரிடம் நடந்ததை கூறி அழுது புலம்பியுள்ளார். நகை பறி போனதால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சுகந்தி நேற்று கணவர் வேலைக்கு சென்று இந்த நிலையில் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு திரும்பிய ஜெகன், மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் சுகந்தி இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டதில் குடுகுடுப்பைக்காரன் சுகந்தி இடம் நகைகளை ஏமாற்றி எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடுகுடுப்பைக்காரன் யார் என்பது குறித்து அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகந்தி தற்கொலையில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மேலூர் ஆகிய பகுதிகளில் ஜோசியம் மற்றும் குடுகுடுப்பைக்காரர் யாரேனும் தோஷம், பரிகாரம் செய்வதாக தெரிவித்தால் அவர்களிடம் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments