Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

8 வயது சிறுமியுடன் கிணற்றில் தவறி விழுந்த தாய் உயிரிழப்பு – சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனுக்கு ஆட்சியர் பாராட்டு 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை மாலை குளிக்கசென்ற கிணற்றில் தனது 8 வயது சிறுமியிடன் கிணற்றில் தவறி விழுந்த தாய் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கே.புதுக்கோட்டை ஊராட்சி துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன். இவர் விருதுநகரில் தங்கு வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மனைவி குணா(29), தனது குழந்தைகள் லித்திகா(8) மற்றும் நிதர்சன்(7) ஆகியோருடன் அப்பகுதியில் புதன்கிழமை மாலை விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்த கிணற்றில் குளிக்க சென்ற நிலையில், சிறுமி லித்திகா கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். அதனைக்கண்ட குணா சிறுமியை மீட்க முயன்ற நிலையில் அவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்துள்ளார்.

இதனைக்கண்ட அருகில் இருந்த 8 வயது சிறுவன் லோஹித், சற்றும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து லித்திகாவை மீட்டெடுத்து வந்துள்ளான், அதே சமயம் குணாவை காப்பாற்ற தண்ணீரில் குதித்த மற்றோரு சிறுவனையும் காப்பாற்றிய லோஹித், குணாவை கரைக்கு இழுத்து வர முடியவில்லையாம். இதனால் குணா நீரில் மூழ்கினார். சிறுவன் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கிணற்றிலிருந்து குணாவை சடலமாக தான் மீட்க முடிந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார், உடற்கூராய்விற்காக குணா உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வையம்பட்டி போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே பகுதியில் வசித்து வரும் சந்திரசேகர் – தங்கம்மாள் இரண்டாவது மகனாவார் லோஹித். லோஹித் துலுக்கம்பட்டி அரசு பள்ளியில் நிகழாண்டு நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் கிணற்றில் விழுந்த சிறுமி லித்திகா-வை மீட்ட 9 வயது சிறுவன் லோஹித்தின் துணிச்சலான செயலினை அறிந்து  மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு சிறுவனை மாவட்ட ஆட்சியரகத்திற்கு நேரில் வரவழைத்து ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கி பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *