திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் குடியிருப்பு இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட ஆரம்பித்தது.
இந்நிலையில் சமையல் எரிவாயு கிடங்கு அமைந்துள்ள பகுதி தற்போது சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதியாக உள்ளது. எனவே, சமையல் எரிவாயு கிடங்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆழ்வார் தோப்பு பகுதியில் அமைந்துள்ள “ஓ”பாலம் மாநகரின் முக்கிய பகுதியான பாலக்கரை – தென்னூர் பகுதியை இணைக்கும் பாலமாக உள்ளது.
இவ்வழியாக பாலக்கரை மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இப்பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பாலத்தை நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட இருசக்கர வாகனம், ஆட்டோ ஆகியவை கடந்து வருகிறது. மேலும், மழைக்காலங்களில் அதிக அளவு “ஓ” பாலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இருசக்கர வாகனத்தில் சென்று அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மதிமுக கட்சியின் நிர்வாகி வெல்லமண்டி சோமு,
SDPI கட்சி நிர்வாகிகள் பக்ருதீன், தளபதி அப்பாஸ், முஸ்தபா, சதாம், அப்பாஸ் சபியுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments