நேற்று (10.12.2025) மாலை 8:00 மணியளவில் ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, மிக முக்கியமான G-கார்னர் உள்ளிட்ட எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்டகால இரயில்வே கோரிக்கைகள் குறித்த நான்கு கடிதங்களை வழங்கி, ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துரைத்தேன்.
இதில், திருச்சி மக்களின் 16 ஆண்டுகாலமாக முக்கிய கோரிக்கையாக உள்ள, திருச்சி NH-38இல், G-கார்னர் சந்திப்பில் கட்டப்பட வேண்டிய உயர்மட்ட சுழல் மேம்பாலம் குறித்து முன்பே சில முறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததை நினைவூட்டி, மீண்டும் விளக்கினே.
அப்பணியின் இன்றை தொய்வு நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன்.
இந்த G-கார்னர் சந்திப்பு பொன்மலை இரயில்வே தொழிற்சாலை (Golden Rock Workshop) நுழைவாயிலாகவும், ஆயிரக்கணக்கான இரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் தினசரி பயன்படுத்தும் இடமாகவும் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக இரயில்வே ஊழியர்களே பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட சுழல் மேம்பாலம் (elevated rotary) அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தயாராக உள்ளது.
இதற்கான தொழில்நுட்ப விளக்கக்காட்சி கடந்த 14.07.2025 ஆம் தேதி திருச்சி DRM அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்தான முடிவை இரயில்வே அமைச்சகம் அல்லது இரயில்வே வாரியம் தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை, அமைச்சர் அவர்களிடம் சுட்டிக்காட்டி, தாங்கள் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
இந்த பகுதி தொடர் விபத்துகள் நடக்கும் ஒரு கருப்பு பகுதி (black spot) என்பதால், உடனடியாக தாங்கள் தலையிட்டு, நில ஒதுக்கீட்டுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அமைச்சர் அவர்கள், நல்லவிதமாக பதிலளித்தார்.
அத்துடன், மற்ற கோரிக்கைகளான, திருச்சி – திருப்பதி இடையே பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் சேவை ஏற்படுத்த, ஏற்கனவே அமைச்சர் உறுதியளித்தது குறித்த நினைவூட்டி அப்பணியை விரைவு படுத்த கேட்டுக்கொண்டேன்.
அடுத்ததாக,
திருச்சி வழியாக, செங்கோட்டை – சென்னை சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸை (20681/20682) வாரத்தில் மூன்று நாட்களில் இருந்து தினசரி இரயிலாக மாற்றுவது குறித்தும்,
திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190/06191) ஐ நிரந்தர இரயிலாக மாற்றுவது குறித்தும் விரிவாக எழுதி கோரிக்கை கடிதங்களாக வழங்கினேன், அதுகுறித்தும் எடுத்துரைத்தேன்.
அமைச்சர் அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். திருச்சி மக்களின் நலனுக்காக இந்த முயற்சிகள் விரைவில் பலனளிக்கும் என நம்புகிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments