இன்று (11.12.2025) நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ய நேரத்தில் கலந்துகொண்டு எனது திருச்சிக்கான முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தேன்.
அதில், எதிர்வரும், 2026 ஜனவரி முதல் சந்தைபடுத்தப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் BIS – Bureau of Indian Standards தரச்சான்றிதழ் கட்டாயம் ஆகிறதை சுட்டிக்காட்டி,
இதனால் அனைத்து தொழில்களுக்கு இது மிகப் முக்கிய தேவையாக இருக்கும் என்பதை எடுத்துரைத்து,
ஆனால் இன்றைக்கு திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்ட மக்கள், தங்கள் பொருட்களுக்கு BIS தரச்சான்று பெற, சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் நேரவிரையமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது என்பதை விளக்கி,
திருச்சி, தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளதாலும், தென் தமிழ்நாட்டு மாவட்ட மக்களுக்கும் பயனாக அமையும் வகையில்,
திருச்சியில், ஒரு BIS அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், இது, தமிழ்நாடு முழுக்க உள்ள தொழில்துறையினருக்கு மிக பெரிய உதவியாக இருக்கும் என்றும் எனது கோரிக்கையை முன்வைத்து உரையாற்றினேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments